திண்டுக்கல்லில் இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: நள்ளிரவில் பகீர்

நள்ளிரவில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம், திண்டுக்கல்லில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.;

Update: 2022-01-02 22:48 GMT

துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில், டிஐஜி விஜயகுமாரி, காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

திண்டுக்கல் மேற்கு மரிய நாதபுரம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் ராகேஷ் குமார் (26). மேற்கு மரியநாதபுரம் செட்டிகுளம் என்ற இடத்தில்,  நள்ளிரவில் இவர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது.  மர்ம நபர் ஒருவர்,  துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த ராகேஷ் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடன் இருந்த நண்பர்கள்,  அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்துள்ளனர்.

ராகேஷ்குமாரை, மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது,  அவர் மார்பு விலா எலும்புக்கு கீழ் உள்ள வயிற்றுப்பகுதியில்,  ஆறு இடங்களில் குண்டுகள் துளைத்து இருந்துள்ளது.  இதனால் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்தனர்.

ராகேஷ் குமார்

துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார், அரசு மருத்துவமனைக்கு வந்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு டிஐஜி விஜயகுமாரி, காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில்,  குளங்களில் மீன்கள் குத்தகைக்கு எடுக்கும் வேலை பார்த்து வரும் ராகேஷை,  ஏலம் எடுப்பதில் ஏற்படக்கூடிய பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நள்ளிரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்,  திண்டுக்கல் நகர் பகுதியில் பரபரப்பையும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News