கடோபநிடதம் வகுப்பு நீங்களும் கலந்து கொள்ளலாம்..!

இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த வகுப்பை இணையம் வழியாக நேரலையில் காணலாம்.

Update: 2022-03-29 07:13 GMT

ஆத்ம ஞானத்தை விளக்கும் கடோபநிடதம் கிருஷ்ண யசூர் வேதத்தில் அமைந்துள்ளது. இதற்கு ஆதிசங்கரர், மத்வர் ஆகியவர்கள் உரை எழுதி உள்ளனர். 119 மந்திரங்களைக் கொண்ட இந்த உபநிடதம் இரண்டு அத்தியாயங்களாகவும் ஒவ்வொரு அத்தியாயமும் மூன்று பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு பகுதிகளை வல்லிகள் என்று அழைக்கப்படுகின்றது. இந்த உபநிடதம் கதை வடிவில் அமைந்துள்ளதால் இதை கடோபநிடதம் என்பர்.

இது சுவாமி விவேகானந்தருக்கு மிகவும் பிரியமான உபநிடதம்.தமது சீடரிடம், 'உபநிடதங்களில் அதைப்போல அவ்வளவு அழகியது வேறு எதுவும் இல்லை. நீங்கள் எல்லோரும் அதை மனப்பாடம் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். வெறுமனே படிப்பதால் என்ன பயன்? அதில் வரும் நசிகேதனின் நம்பிக்கை, தைரியம், விவேகம், துறவு முதலியவற்றை வாழ்வில் கடைபிடிக்க முயற்சி செய்' என்று கூறியுள்ளார்.

இந்த கடோபநிடதம் பற்றிய செவ்வாய்கிழமை தோறும், மருத்துவர் ஐயப்பன் மகாலிங்கம் விளக்க உரையாற்றுகிறார். இன்று மாலை நமது யூடியூப்பில் நேரடியாக கேட்க இந்த இணைப்பை   youtube/InstaNewsCityகிளிக் செய்யுங்கள்



Tags:    

Similar News