இன்னிக்கு என்ன பாட்டு கேட்கலாம் என்ன படம் பார்க்கலாம்.புதிய பரிணாமம்
உலகம் இப்போது என்ன பாடல் கேட்டுக்கொண்டிருக்கிறது. என்ன படம் பார்க்கலாம் என்பதற்கு பதில் அளிக்கும் புதிய பரிணாம வளர்ச்சி;
உலகம் இப்போது என்ன பாடல் கேட்டுக்கொண்டிருக்கிறது. இன்று என்ன படம் பார்க்கலாம் என்பதற்கு பதில் அளிக்கும் வகையில் புதிய பரிணாம வளர்ச்சி..
குளோபல் மியூசிக் சார்ட்ஸ்' (https://music.tello.app/) எனும் அந்த தளம், உலகம் இப்போது என்ன பாடல் கேட்டுக்கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வழி செய்கிறது. இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில், ஒவ்வொரு நாட்டிலும், அதிகம் கேட்கப்படும் பாடல்களின் பட்டியலை பார்க்கலாம். அகர வரிசையில் நாடுகளின் பட்டியல் இடம்பெறுகிறது.
எந்த நாட்டில் எந்த பாடல்கள் அதிகம் கேட்கப்படுகிறது என்பதை எளிதாக தெரிந்து கொள்ளாம். இசை போக்கு தொடர்பான புரிதலுக்கும் இது உதவும். தினந்தோறும் தகவல் புதுப்பிக்கப்படுவது இந்த தளத்தின் இன்னொரு சிறப்பம்சம். இந்த தகவல்களை செய்தி மடல் வடிவிலும் பெறலாம்.
உலகம் என்ன பாடல்களை கேட்டுக்கொண்டிருக்கிறது என்பதை தினமும் தெரிந்து கொள்ள முடிவது இசை ஆர்வம் கொண்டவர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்க கூடியது தானே!
இன்னொரு இணையதளம் (https://showmeamovie.app/)
இந்த இணையத்தில் இன்று என்ன படம் பார்க்கலாம் என்பதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இணையத்தில் திரைப்படங்களும், வலைத்தொடர்களும் குவிந்து கிடந்தாலும், இப்போது என்ன படத்தை பார்க்கலாம் என்பதை தீர்மானிப்பது பலருக்கு குழப்பமாக இருக்கலாம். இதற்கு தீர்வாக, என்ன படம் பார்க்கலாம் என்பதை தேடி கண்டறிவதற்கான செயலியை இந்த தளம் வழங்குகிறது.
இந்த தளத்தில், பயனாளிகள் தங்கள் ரசனை, விருப்பம் ஆகிய விவரங்களை சமர்பித்தால் அதனடிப்படையில், திரைப்படங்கள் அல்லது வலைத்தொடர்களை பரிந்துரைக்கிறது. நெட்பிளிக்ஸ் காலத்திற்கு ஏற்ற தேடல் எந்திரமாகவும் இந்த சேவையை கருதலாம்.
தகவல் உதவி : சைபர்சிம்மன்