Aalamaram in Tamil ஆயிரம் அற்புதங்கள் நிறைந்த ஆலமரம்

ஆல் போல் தழைத்து என மணமக்களை வாழ்த்துவது எவ்வளவு பொருள் பொதிந்தது என்பது ஆலமரத்தின் அற்புதங்கள் மூலம் உணரலாம்;

Update: 2023-09-27 12:02 GMT

ஆலமரம் - காட்சி படம் 

ஆழமாக வேரூன்றி, விழுதுகளைப் பரப்பி வளரும் மரங்களுள் ஆலமரம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. இதை ஆல் என்றும் அழைப்பர். இமயமலைச் சாரலின் சரிவுகளில் இது காட்டு மரமாக வளர்கிறது. சாலை ஓரங்கள், ஆலயங்கள், மேடைக் கோவில்கள் ஆகியவற்றின் அருகிலும் கிராமப் பொது இடங்களிலும் வளர்க்கப்படுகின்றது.

இது 20 முதல் 35 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. மிகவும் பருத்த அடி மரத்தைக் கொண்டது. அடிமரத்தின் சுற்றளவு 15 மீட்டர் அல்லது அதற்கு மேலும் இருக்கக்கூடும். கிளைகளிலிருந்து மெல்லிய வேர்கள் தோன்றிக் கீழ்நோக்கி வளர்கின்றன. இவை விழுதுகள் எனப்படும். நாளடைவில் பெருத்த தூண் போல ஆகின்றன.


ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி என்று வாழ்த்துவார்கள். தழைத்தோங்கி நிற்பதற்கு ஆலமரத்தைத்தான் குறிப்பிடுவார்கள். அதற்கு நிகராக எதையும் சொல்ல முடியாது.

ஆலமரத்தின் கீழ் எதுவும் முளைக்காது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அப்படியே முளைத்தாலும் அது பூக்காது, காய்க்காது, கனியாது என்பார்கள். ஏனென்றால், ஆலமரம் இருக்கும் இடத்தில் மற்ற செடிகள் ஓங்கி உயரவோ, வளரவோ முடியாது. அதுபோன்ற சக்தி கொண்டது ஆலமரம்.

ஆலங்குச்சியில் ஒருவிதமான துவர்ப்புத் தன்மையைக் கொடுக்கும். மேலும், அதில் கொஞ்சம் பாலும் இருக்கும். இந்தப் பால் தேய்க்கத் தேய்க்க பல்லுக்கு இயற்கையான உரத்தைக் கொடுத்து சக்தியைக் கொடுக்கிறது..

அதன் இலைகள், பட்டைகள் இதற்கெல்லாம் நிறைய மருத்துவ குணம் உண்டு. இலைக் கசாயம் சளித் தொந்தரவை நீக்கவல்லது. பட்டைகள் உள்ளுக்குள் இருக்கும் இரணத்தை ஆற்றக்கூடியது. வாய்ப்புண் போன்றவற்றை ஆலமரத்தில் இருந்து வடியும் பால் குணமாக்கும். ஆலம் பட்டைகள் ஆணின் உயிரணுக்கள், விந்தணுக்களை வலுப்படுத்தக்கூடிய சக்தி உண்டு. ஆலம் பழத்தை பதப்படுத்தி உண்பவர்களும் உண்டு


படர்ந்த, அடர்த்தியான நிழல் தரும் மிகச்சிறந்த மரமாகச் சாலையோரங்களில் வளர்க்கப்படுகின்றது. இம்மரத்தின் முட்டு வேர்களின் கட்டை உறுதியானது. அது கூடாரக் கம்பங்களாகவும், வண்டிகளின் ஏறுகாலாகவும் பயன்படுகிறது. இதன் பட்டை நாட்டு மருத்துவம், சித்தமருத்துவம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன.

இம்மரத்தின் பால் (Latex) மூட்டுவலிக்குப் பயன்படுகிறது. பட்டை நிரிழிவு நோய் தீர்க்கும். விழுதுகள் ஈறு நோய்களைப் போக்க வல்லது. ‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி’ என்ற பழமொழி உண்டு. ஆலமரத்தின் விழுதுகளின் நுனியில் உள்ள குச்சி போன்ற மெல்லிய பகுதியைப் பல் துலக்கப் பயன்படுத்தப் பல் உறுதியாகும். இலைகள் ஆட்டுக்குத் தீவனமாகக் கொடுக்கப்படுகின்றன. கனிகளைப் பறவைகளும் குரங்குகளும் விரும்பி உண்கின்றன.

இந்திய பாரம்பரிய மருத்துவ முறையானது பல்வேறு மூலிகைகள், புதர்கள், மரங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை பல்வேறு வகைகளாக வகைப்படுத்துகிறது, அங்கு அவை நோயுற்ற நிலைமைகளின் சிகிச்சை மற்றும் மேலாண்மைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

அவற்றில் சிலர் ஒரு குறிப்பிட்ட சுகாதார நிலைக்கு சுட்டிக்காட்டப்பட்டாலும், ஆலமரம் இயற்கை அன்னையின் மடியில் இருந்து ஒரு கண்கவர் தாவரம் மற்றும் மகத்தான மருத்துவ குணங்கள் கொண்டது.


மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, வெண்புள்ளி, மூட்டுவலி, ஈறு மற்றும் பற்கள் கோளாறுகள், கீழ் முதுகு மற்றும் வாத வலி, பெண் மலட்டுத்தன்மை, காது பிரச்சனைகள், தோல் மற்றும் முடி பிரச்சனைகள், நாசி பிரச்சனைகள், குமட்டல் மற்றும் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது

தூண் போன்ற தண்டுகள் மற்றும் தாங்கும் தண்டுகளுடன், ஒரு ஆலமரம் ஒரு பெரிய பரப்பளவில் பரவி ஒரு சிறிய காடு போல் தெரிகிறது. மரங்களின் தண்டு பெரியது, புல்லாங்குழல் மற்றும் சாம்பல் நிறமானது. வேர்கள் பொதுவாக கீழ்நோக்கி பரவி மரத்தாலான துணை கிளைகளை உருவாக்குகின்றன, அவை காலப்போக்கில் முக்கிய உடற்பகுதியில் இருந்து பிரித்தறிய முடியாததாக மாறும். ஆலமர இலைகள் கடினமானவை, அடர்த்தியானவை, தோல் மற்றும் ஓவல் வடிவத்தில் இருக்கும்.

ஆலமரம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் ஃபிளாவனாய்டுகள், இனோசிட்டால், லுகோபில், கேலக்டோஸ், ருடின் மற்றும் டானின்கள் உள்ளன.

மேலும் பாலிசாக்கரைடுகள், ஆக்சோசிடோஸ்டெரால், கீட்டோன்கள் மற்றும் டாக்லிசிடிக் அமிலம் ஆகியவற்றிலும் நிறைந்துள்ளது. மரத்தின் இலைகளில் ட்ரைடர்பீன்ஸ், ஆக்சோசிடோஸ்டெரால் மற்றும் ஃப்ரைடெலின் ஆகியவை உள்ளன, அதே சமயம் பட்டையில் பெங்காலினோசைடு, குளுக்கோசைடுகள் மற்றும் ஃபிளாவனாய்டு கிளைகோசைடுகள் உள்ளன. மரத்தின் முக்கிய விழுதுகளில் பைட்டோஸ்டெரால்கள் உள்ளன, அதே சமயம் கடின மரத்தில் பெங்கலெனோசைடு, லிக்லிக் அமிலம் மற்றும் டெட்ராக்ஸோஸ்டெரால் ஆகியவை உள்ளன.

இந்த சக்திவாய்ந்த உயிர்வேதியியல் கூறுகள் நிறைந்த ஆலமரம், வயிற்றுப்போக்கு, வயிற்றுப்போக்கு, காது, மூக்கு மற்றும் பல் பிரச்சனைகள், புண்கள், மலட்டுத்தன்மை பிரச்சனைகள், வாத வலி, செரிமான பிரச்சனைகள், குவியல்கள், உடல் பருமன், காய்ச்சல், தலைவலி போன்ற பல உடல்நலக் கோளாறுகளுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

பசும்பால், ஆட்டுப்பால் சரி. அதென்ன ஆலம்பால்?

ஆலமரத்திலிருந்து கிடைக்கும் மருத்துவப்பால் இது! ஆலம்பால் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடியது. ஆலம்பாலைக் கொண்டு வாய்க் கொப்பளிக்க, `ஆடும் பல்லையும் இறுக்கும்’ என்று சித்த மருத்துவ பாடல் தெரிவிக்கின்றது.

ஈறுகளுக்கு வலிமையைக் கொடுத்து, பற்களை இறுக்கிப் பிடிக்க ஆலம்பால் பெருமளவில் உதவும். பிற மருந்துகளோடு சேர்ந்து, சருமநோய்கள் மற்றும் ரத்தக் குறைவு முதலிய தொந்தரவுகளை நிவர்த்தி செய்யவும் இந்த ஆலமரப் பால் மருந்தாகப் பயன்படுகிறது.

புண்களைப் போக்கும் ஆலமரப்பட்டை

ஆல மரப்பட்டையை ஒன்றிரண்டாகச் சிதைத்து, குடிநீரிட்டுக் கொண்டு வாய்க் கொப்பளிக்க, வாயில் தோன்றும் புண்கள், நாவில் உண்டாகும் சிறு கொப்புளங்கள், ஈறிலிருந்து வடியும் ரத்தம் ஆகியவை குணமாகும். பேசும்போது வாயில் தோன்றும் நாற்றத்தையும் ஆலமரப் பட்டைக் குடிநீர் சரிசெய்யும்.


துவர்ப்புச்சுவை கொண்ட ஆலமரப்பட்டைகளில் புண்களை குணமாக்கும் பல்வேறு வேதிப்பொருள்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. துவர்ப்புச் சுவையுள்ள மூலிகைப் பொருள்கள், புண்களை குணமாக்கும் மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுகின்றன. புண்களைக் கழுவும் `மருந்து நீராகவும்’ இந்த ஆலமரப் பட்டை குடிநீரைப் பயன்படுத்தலாம்.

ஆலமர இலைகளை லேசாக வதக்கி, கட்டிகளுக்கு வைத்துக் கட்ட, விரைவாக கட்டி பழுத்து உடையும். மூட்டு வீக்கங்களுக்கும் இதை பற்றாக உபயோகிக்கலாம். வலி நிவாரணியாகச் செயல்படுவது, புண்களை விரைந்து குணமாக்குவது, வீக்கங்களைக் குறைப்பது… போன்ற நுணுக்கமான செயல்பாடுகள் ஆலமர இலைகளுக்கும் பட்டைகளுக்கும் இருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன


ஆலமரத்தை வைத்து பராமரித்தால் ஆக்சிஜன், ஓசோன் அனைத்துமே முழுமையாகக் கிடைக்கும்.இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது .அதுவும் ஒவ்வரு ஆலமரமும் மிகப் பழமையாக பாரம்பரிய தொடர்ச்சியும் கொண்டவை.

பெரிய மரமாக அடர்ந்து படர்ந்து இருப்பதினால் மட்டுமே ஆலமரத்தடியில் ஊர்க்கூட்டம் நடத்தபடுவதில்லை , மாறாக ஆலமரத்தடியில் சென்று அமர்ந்தாலே அமைதி வந்துவிடும் . இம்மரத்தின் அடியில் தவம் இருப்பவர்களுக்கு ஞானம் பெற்றுத் தருவதில் ஆல மரத்துக்குத் தனி மகிமை உண்டு. இந்த மரத்தடியில் ஊர்கூட்டம் நடத்தினால் மக்கள் அமைதியாக உணர்ச்சிவசப்படாது இருப்பர் என்று நம் முன்னோர் அறிந்திருந்தனர் 

Tags:    

Similar News