சினிமா வாய்ப்பு தேடிய 'டிக்டாக்' மனைவி; ஆண்நண்பன் சகவாசத்தால் பறிபோனது உயிர்

Latest Murder News -சினிமா வாய்ப்புக்காக அலைந்த 'டிக்டாக்' மனைவியை, துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கணவர் கொலை செய்தார்.

Update: 2022-11-09 03:28 GMT

கணவரால் கொலை செய்யப்பட்ட ‘டிக்டாக்’ சித்ரா (பைல் படம்)

Latest Murder News -திருப்பூர் மங்கலம் ரோடு, செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 38). தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (35). அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில், சித்ரா வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவருக்கு திருமணமாகி விட்டது. சமூக வலைதளமான 'டிக்-டாக்' மற்றும்' இன்ஸ்டாகிராம்' ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்ட சித்ரா, அடிக்கடி பதிவுகளை செய்துள்ளார். மனைவியின் செயல்பாடு, சமூக வலைத்தளங்களில் அவர் பதிவேற்றம் செய்த நடனம், ஆண் நண்பருடன் சென்னை சென்று அங்கு தங்கி நடிக்க வாய்ப்பு தேடியதை பிடிக்காத கணவர் அமிர்த லிங்கம், அவரை கொலை செய்தார். போலீசார், அவரை கைது செய்தனர்.

மனைவியை கொலை செய்தது குறித்து, போலீசில் அமித்தலிங்கம் கொடுத்த வாக்குமூலம்

என் மனைவி சித்ரா, கடந்த 3 ஆண்டுகளாக இணையதளத்தில் வீடியோ பதிவிடுவதை அதிக ஆர்வத்துடன் செய்து வந்தார். ஆரம்பத்தில் இருந்து இவ்வாறு வீடியோ பதிவிடுவது, எனக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து பல முறை மனைவியிடம் எடு்த்துக்கூறி, 'இது வேண்டாம், தேவையற்ற செயல், விட்டுவிடு' என்று, அறிவுரை கூறினேன். ஆனால் அவளுடைய ஆட்டத்திற்கு, பலர் விருப்பம் தெரிவித்தால் அவள் தொடர்ந்து புதிய புதிய வீடியோவை பதிவேற்றம் செய்தாள். இதனால், அவளுக்கு சென்னையில் உள்ள ஒரு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் சித்ராவை சினிமாவில் சேர்த்து விடுவதாக கூறினார். அந்த பழக்கத்தில், சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை செல்வதாக கூறினார். நானும், என் மகள்களும் வேண்டாம் என்றோம். ஆனால், எங்களையும் மீறி சென்னைக்கு சென்றாள். இதனால் எனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வீட்டாரின் எதிர்ப்பை மீறி சென்னை சென்று, சில மாதங்கள் அங்கேயே தங்கினாள்.

மகள்களின் எதிர்கால நன்மையை கருத்தில் கொண்டு, தன்னுடன் இருக்குமாறு பலமுறை அறிவுறுத்தினேன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக, மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தி, சென்னையில் இருந்து திருப்பூருக்கு வரவழைத்தேன். அதன்பின், மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி, சென்னைக்கு செல்வதாக என்னிடம் தெரிவித்தார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். இதனால் மீண்டும் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஆனால் சென்னையில் இருந்து, எனது மனைவியின் செல்போனுக்கு வா.. வா... என்று தொடர்ந்து, அழைப்பு வந்து கொண்டே இருந்தது.

இதையடுத்து சென்னைக்கு செல்லப்போவதாக, கடந்த 6-ம் தேதி சித்ரா என்னிடம் கூறிளாள். 'நான் வேண்டாம்' என்றேன். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சித்ராவை, தன்னுடன் இருக்க வைக்க வேண்டும் என்பதற்காகவும், அவளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவும், கடுமையான வார்த்தைகளால் திட்டினேன். அப்போது, அவள் என்னை தாக்க முயற்சி செய்தார். அதனால் தான் ஆத்திரம் தாங்க முடியாமல், துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

இவ்வாறு அமிர்தலிங்கம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News