மு.க. ஸ்டாலின் எதற்காக துபாய் சென்றார்? டி.ஜெயக்குமார் பகீர் பேட்டி

மு.க. ஸ்டாலின் எதற்காக துபாய் சென்றார்? என டி.ஜெயக்குமார் பகீர் பேட்டி அளித்தார்.

Update: 2022-03-25 14:12 GMT

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடந்த ஒரு மோதல் நிகழ்வில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் சிறையிலிருந்து நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப் பட்டிருந்தார்.

திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஜெயக்குமார் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.அவருடைய நிபந்தனைகள் தளர்த்தப் பட்டதைத் தொடர்ந்து ஜெயக்குமார் என்று கடைசியாக கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு சென்னைக்கு புறப்பட்டார்.

அப்போது நிருபர்கள் அவரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலினின் துபாய் பயணம் பற்றி கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஜெயக்குமார் முதல்வர் தொழில் முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்ப்பதற்காக துபாய் செல்வதாக கூறிவிட்டு சென்று இருக்கிறார். அவர் உண்மையிலேயே தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காகத்தான் சென்றாரா ?அல்லது சொந்த  வேலை காரணமாக சென்றாரா? என்பது அவர் வந்த பின்னர்தான் தெரியும்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது வெளிநாட்டிற்கு சென்றிருந்தார். திரும்பி வந்ததும் வெளிநாட்டு முதலீடுகள் பற்றி வெளிப்படையாக பேட்டியளித்திருந்தார். அதேபோல் ஸ்டாலினும் தெரிவிக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News