நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அரிய தினம் பிப்ரவரி 29.

2024-ம் ஆண்டுக்கு இந்த தனிச் சிறப்பு உண்டு. இந்நாளில் பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பிறந்தநாள் வரும்.;

Update: 2024-02-29 01:39 GMT

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அரிய தினம் பிப்ரவரி 29. 2024-ம் ஆண்டுக்கு இந்த தனிச் சிறப்பு உண்டு. இந்நாளில் பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பிறந்தநாள் வரும். அந்த வகையில் இந்த சிறப்பு மிக்க லீப் ஆண்டில் பிறந்த சில பிரபலங்கள் குறித்த தகவல் இதோ உங்களுக்காக..

இந்தியாவில் காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் (1896), பிரபல நாட்டியக் கலைஞரும், சென்னை கலாச்சேத்திரா நிறுவனருமான ருக்மணி அருண்டேல் (1904), இந்திய ஹாக்கி ஒலிம்பியன் ஆடம் சிங்ளேர் (1984) ஆகியோர் பிப்ரவரி 29ம் தேதி பிறந்தவர்களில் முக்கியமானவர்கள். டாஸ்மானியாவின் எட்டாவது அதிபரான மில்ன் வில்சன் (1812-1880) பிறந்ததும், மறைந்ததும் பிப்ரவரி 29 அன்றுதான்.ரோமன் கத்தோலிக்க தலைமை மதகுருவாக இருந்து மறைந்த போப் மூன்றாம் பால் பிப்ரவரி 29ல் பிறந்தவர்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் இந்த விநோத நாள் குறித்து, மேலும் சில சுவையான தகவல்கள்:

போப் உருவாக்கிய லீப் ஆண்டுலீப் ஆண்டை உருவாக்கியவர் கி.மு.45ம் ஆண்டில் ரோமை ஆண்டு வந்த மன்னன் ஜூலியஸ் சீசர் ஆகும். அப்போது புழக்கத்தில் இருந்த ரோம் நாட்காட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 22 நாட்களைக் கொண்ட கூடுதல் மாதம் ஒன்று சேர்க்கப்பட்டது. இந்த குழப்பத்திற்கு தீர்வு காணுமாறு சீசர் பிறப்பித்த ஆணையின் பேரில் ரோம் வானியலாளர் சோசிஜீன்ஸ் புதிய காலண்டரை உருவாக்கினார். அதில் ஆண்டுக்கு 365நாட்களும், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் கூடுதலாக ஒரு நாளைச் சேர்க்கும் நடைமுறையையும் அவர் அறிமுகப்படுத்தினார். ரோம் நாட்காட்டியில் கடைசி மாதமாக இருந்த பிப்ரவரியில் இந்த கூடுதல்நாள் சேர்க்கப்பட்டது.இது ஜூலியன் நாட்காட்டி என்று அழைக்கப்பட்டது.

இன்றைய நாட்காட்டியை பிரபலப்படுத்தியவர் போப் பதிமூன்றாம் கிரகரி ஆவார். எனவே தற்போது நடைமுறையில் உள்ள நாட்காட்டியை கிரகரியன் நாட்காட்டி என்று அழைக்கிறார்கள். கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்படும் ஆண்டை அவர் லீப் ஆண்டு என அழைத்து பழக்கத்திற்குக் கொண்டு வந்தார். இந்த நாட்காட்டி 1582ம் ஆண்டில் அறிமுகமானது. கிபி.5ம் நூற்றாண்டில் அயர்லாந்தில் தன் மனதுக்குப் பிடித்தவனிடம் தன்னை மணந்து கொள்ளுமாறு பெண்கள் கேட்பதற்கு உகந்த ஆண்டு லீப் ஆண்டு என்று கருதப்பட்டது. பின்னர் ராணி மார்க்கரெட் இதனை சட்டப்பூர்வமாக்கினார்.

அந்த முன்மொழிவை ஏற்க மறுக்கும் ஆடவன் அந்தப் பெண்ணுக்கு ஒரு புதிய உடையும், கையுறையும் வாங்கித் தர வேண்டும்.சில நாடுகளில் லீப் ஆண்டு ஒரு அமங்கலமான ஆண்டாகக் கருதப்பட்டது. இவ்வாண்டில் பிறக்கும் குழந்தைகள் ராசியில்லாத குழந்தைகள் என்றும் தூற்றப்பட்டன. பிப் 29-ம் தேதியின் சின்னம் தவளை. தவளை தாவுவதைப் போல, லீப் நாளும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை விட்டுவிட்டு வருவதால் இப்படி ஒரு பெயர் வந்தது.

ஒவ்வொரு நாளையும் போலவே, லீப் நாளின்போது சராசரியாக 3.5 லட்சம் பேர் புதிதாகப் பிறக்கிறார்கள். பிப். 29 அரிய நோய்கள் நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.

Tags:    

Similar News