திருச்சி வழியாக மானாமதுரை- மைசூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

திருச்சி வழியாக மானாமதுரை- மைசூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

Update: 2024-03-21 17:17 GMT

போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு  மைசூரு - மானாமதுரை இடையே திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரயில் எண்.06237 மைசூரு- மானாமதுரை சிறப்பு ரயில் மைசூரிலிருந்து 01.04.2024 முதல் 27.05.2024 வரை திங்கட்கிழமைகளில் 18.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 09.10 மணிக்கு மானாமதுரை சென்றடையும்.

ரயில் எண்.06238 மானாமதுரை – மைசூரு சிறப்பு ரயில் 02.04.2024 முதல் 28.05.2024 வரை செவ்வாய்கிழமைகளில் மானாமதுரையில் இருந்து மதியம் 12.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 01.55 மணிக்கு மைசூருவை சென்றடையும்.

ஏசி 2-அடுக்கு, ஏசி 3-அடுக்கு, ஸ்லீப்பர் வகுப்பு & பொது இரண்டாம் வகுப்பு  பெட்டிகள் இந்த ரயிலில் இருக்கும்.

மாண்டியா, மத்தூர், ராமநகரம், கெங்கேரி, கேஎஸ்ஆர் பெங்களூரு, பங்காரப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மற்றும் மதுரை ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும்.

ரயில் எண்.06237 மைசூரு மானாமதுரை சிறப்பு ரயில்:

(திங்கட்கிழமைகளில்) திருப்பத்தூர் 00.43/00.45 மணி; சேலம் 02.20/02.40 மணி; நாமக்கல் - 03.28/03.30 மணி; கரூர் – 04.00 / 04.02 மணி.

ரயில் எண்.06238 மானாமதுரை - மைசூரு சிறப்பு ரயில்:

(செவ்வாய்க்கிழமைகளில்) கரூர் 16.58/17.00 மணி; நாமக்கல் 17.39/17.40 மணி; சேலம் - 18.50/19.00 மணி; திருப்பத்தூர் - 20.25/20.27 மணி.

இத் தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News