தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் மீண்டும் நாளை முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update: 2021-12-30 08:30 GMT

தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை காலத்தில் பலத்த மழை பெய்து, வெள்ளக்காடாக மாற்றியது. அதன் பின்னர், மழை ஓய்ந்து, மார்கழி பனியின் தாக்கம் இருந்து வருகிறது.

இந்நிலை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று காலை மிதமான மழை பெய்தது. சென்னை நகரில் கிண்டி, சைதாபேட்டை, சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்தது.

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, கூறியுள்ளது. குறிப்பாக, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News