மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்ப்பதற்கு தடை

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்ப்பதற்கு நாளை வரை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-01-25 13:15 GMT

பைல் படம்.

நாட்டின் 74வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதையடுத்து சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கமாகும். தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே, இந்தாண்டு தமிழக கவர்னர் மற்றும் தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா மெரினா கடற்கரைச் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. எனவே சென்னை காமராஜர் சிலை உள்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குடியரசு தினவிழா நடைபெறும் காமராஜர் சாலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் நாளை முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News