சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் பலி; 4 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2022-01-05 03:45 GMT

விருது நகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை, மஞ்சள் ஓடைப்பட்டியில் உள்ள சோலை  பட்டாசு ஆலையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதில், பட்டாசு ஆலை கட்டிடம் சேதமடைந்தது. இந்த விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட மூன்று பேர் பலியாகி உள்ளனர்; 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்கள், சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயை அணைப்பதற்கு சாத்தூர், வெம்பக்கோட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர்.

ஏற்கனவே சிவகாசி மாவட்டம் களத்தூரில் ஜனவரி 1ஆம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Tags:    

    Similar News