நலம் பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி: விஜயகாந்த்
விஜயகாந்த் விரைவில் பூரண நலம்பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அக்கட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது
தேமுதிக தலைவர் விஜயகாந்த் , அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வரும் அவர், விரைவில் குணமடைய வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைபேசி வாயிலாகவும், ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் எனது உடல் நிலை குறித்து நலம் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
தொலைபேசி வாயிலாக விசாரித்த மதிப்புக்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தெலுங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன், தமிழக முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின், தமிழக எதிர்கட்சி தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி, திரு. ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் திரு.எல் முருகன், பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை,
காங்கிரஸ் கட்சி எம்.பி திரு. திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய இணை அமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன், அமமுக பொது செயலாளர் திரு. டிடிவி தினகரன்,திருமதி. வி.கே. சசிகலா, பாமக தலைவர் திரு. அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. ஜி.கே. வாசன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு. பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான திரு. கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், புதிய நீதி கட்சி தலைவர் திரு. ஏ.சி. சண்முகம் மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், பார்த்திபன், நடிகை சரோஜா தேவி
மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள், கழக மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள், கழக மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.