முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-07-17 04:44 GMT

மூத்த அரசியல் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்ஜிஆர் கழகத் தலைவருமான ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

95 வயதான இவர் அரசியலில் இருந்து ஒதுங்கி சென்னை, தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அதிமுகவில் பொறுப்பில் இருந்த போதிலும் திமுகவினருடன் நட்பு பாராட்டி வந்தார்.

தமிழகத்தில் பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. தற்போது மூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News