காங்.மூத்ததலைவர் குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்துள்ளார்.;

Update: 2022-10-09 03:58 GMT

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குமரி அனந்தன் 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சியின் மூத்த தலைவருமானவர் குமரி அனந்தன்(வயது 90) மூச்சு திணறல் காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் குமரி அனந்தனை மருத்துவர்கள் குழு  24 மணி நேரமும் தொடர்ச்சியாக கண்காணித்து மருந்து மாத்திரைகளை கொடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். உடல் நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை பொறுத்து அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. 

குமரி அனந்தன் மகள் தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவின் தமிழ் மாநில முன்னாள் தலைவராக இருந்தார். தற்போது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக உள்ளார்.

சென்னையில் வசித்து வரும் குமரி அனந்தன், அரசு சார்பில் தனக்கு வீடு ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர், தமிழ்நாடு மக்களுக்காக நிறைய பாதயாத்திரை போராட்டங்களை சந்தித்தவர் என்கிற முறையில் அண்மையில் முதல்வர் ஸ்டாலின். குமரி அனந்தனுக்கு சென்னை அண்ணா நகரில் உள்ள அரசு குடியிருப்பில் வீடு வழங்கி உத்தரவிட்டார் 

Tags:    

Similar News