வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா
Vilakku Vallalar Jothi Images-புகழ்பெற்ற வடலூர் சத்திய ஞான சபையில் பிப்.5 அன்று தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெறுவதையொட்டி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது;

வடலூர் ஜோதி தரிசனம் - கோப்புப்படம்
Vilakku Vallalar Jothi Images-வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. சபையின் தெற்கு வாசல் வழியாக உள்ளே சென்றால் வலதுபுறம் பொற்சபையும், இடதுபுறம் சிற்சபையும் உள்ளன. மத்தியில் பஞ்சபூத தத்துவங்களை குறிக்கும் ஐந்துபடிகளை கடந்து உள்ளே சென்றால் சதுரபீடத்தில் வள்ளலார் ஏற்றி வைத்த தீபம் காணப்படும்.
அதன் முன் 6.9 அடி உயரமும், 4.2 அடி அகலமும் கொண்ட நிலைக்கண்ணாடி உள்ளது. கண்ணாடிக்கு முன்னால் 7 வண்ணங்களிலான திரைகள் காணப்படும். இந்த திரைகளை நீக்கி நிலைக்கண்ணாடிக்கு பின் உள்ள தீபத்தை தரிசிப்பதே ஜோதி தரிசனம் ஆகும்
சத்தியஞான சபையில் ஆண்டுதோறும் தை மாசம் பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் நடக்கும். அதன்படி இந்த ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதலுடன் தொடங்கியது. விழாவில் வருகிற 31-ம்தேதி முதல் 3-ம் தேதி வரை ஞானசபையில் திரு அருட்பா முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் வருகிற 4ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு அகவல் பாராயணம், 7.30 மணி அளவில் வடலூர் தருமச்சாலை, வள்ளலார் பிறந்த மருதூர் இல்லம், தண்ணீரால் விளக்கை எரிய செய்த கருங்குழி ஆகிய இடங்களில் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது.
தொடர்ந்து 10 மணி அளவில் சத்திய ஞானசபையில் பார்வதிபுரம் கிராமவாசிகள் சார்பில் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது. பின்னர் மதியம் 1 மணியளவில் தருமச்சாலை மேடையில் திருஅருட்பாஇசை நிகழ்ச்சியும், தொடர்ந்து சன்மார்க்க கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் (திங்கட்கிழமை) காலை 5 மணி ஆகிய ஆறு காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. பின்னர் 7ம் தேதி மதியம் 12 மணிக்கு திருஅறை தரிசனம் நடைபெற உள்ளது.
தைப்பூச விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2