தமிழகத்தில் இன்றைய மெகா தடுப்பூசி முகாமில் 22.33 லட்சம் பேர் பயன்

தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற ஆறாவது கோவிட் மெகா தடுப்பூசி முகாமில் மொத்தமாக 22,33,219 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.;

Update: 2021-10-23 17:10 GMT
தமிழகத்தில் இன்றைய மெகா தடுப்பூசி முகாமில்  22.33 லட்சம் பேர் பயன்

பைல் படம்.

  • whatsapp icon

தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் சனிக்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் படி இன்று மாநிலம் முழுவதும் 6வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

இதில் வழக்கத்தை விட பொதுமக்கள் ஆர்வமாக தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர். பல இடங்களில் பரிசுப் பொருட்களும் குலுக்கல் முறையில் அறிவிக்கப்பட்டன.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற ஆறாவது கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் மொத்தமாக 22,33,219 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதில் முதல் தவணையாக 8,67,573 பயனாளிகளுக்கும், இரண்டாவது தவணையாக 13,65,646 பயனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News