யூபிஎஸ் பேட்டரி வெடித்து தீ: கோவையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

கோவையில், யூபிஎஸ் பேட்டரி வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில், தாய், இரண்டு மகள்கள் உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.;

Update: 2022-03-15 08:30 GMT
யூபிஎஸ் பேட்டரி வெடித்து தீ: கோவையில் ஒரே குடும்பத்தில்  3 பேர் பலி

பலியான அர்ச்சனா மற்றும் அஞ்சலி. 

  • whatsapp icon

கோவை துடியலூர் அருகே உள்ள உருமாண்டாம்பாளையம் ரோஸ் கார்டன் பகுதியில் உள்ளது. இங்கு வசித்து வந்தவர், விஜயலட்சுமி. இவரது கணவர் ஜோதிலிங்கம் கடந்த 2 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்.

விஜயலட்சுமிக்கு, அர்ச்சனா மற்றும் அஞ்சலி என இரு மகள்கள். ஒரு மகள் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்; மற்றொருவர், நிதி சார்ந்த வேலை பார்த்து வந்துள்ளார். இரவில், இவர்களது வீட்டில், யூபிஎஸ் பேட்டரி வெடித்துள்ளது. இதில், வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இதில், தீயில் சிக்கியும் மூச்சு திணறலாலும் மூவரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறை மற்றும் துடியலூர் போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் கோவையில் பரபரப்பையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News