அறிகுறி ஏற்படுத்தாத, ஆபத்து இல்லாத ஜிகா வைரஸ் பிறப்பிடம் உகாண்டா
வெப்ப மண்டல பகுதிகளில் அவ்வப்போது பரவி வரும் ஜிகா வைரசின் பிறப்பிடம் உகாண்டா. அங்கு கடந்த 1947-ல் முதன் முதலில் குரங்குகளிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.;
டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய்களை பரப்பும் கொசுக்களாலேயே ஜிகா வைரசும் ஏற்படுகிறது. இது ஆபத்தானது அல்ல. இதற்கு மருத்துவமனை சிகிச்சையும் தேவைப்படாது. ஆனால், மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கும் ஒருவருக்கு இந்த தொற்று ஏற்பட்டால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு, சிறிய தலையுடன் பிறக்கலாம்.
வெப்ப மண்டலங்கள் மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் அவ்வப்போது பரவி வரும் ஜிகா வைரசின் பிறப்பிடம் உகாண்டா ஆகும். அங்கு கடந்த 1947-ல் முதன் முதலில் குரங்குகளிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் 1952-ல் உகாண்டா மற்றும் தான்சானியாவில் மனிதர்களிடமும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
1954 ம் ஆண்டு நைஜீரியாவில் முதல் முதலாக மனிதர்களிடத்தில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, பசிபிக் தீவுகள் ஆகிய பகுதிகளில் தொற்று பரவியது. இதெல்லாம் சிறிய அளவில் பரவியவையே. இதற்கு முன்பு மனித உடல் நலனுக்கு சீரியசான அச்சுறுத்தலாக ஜிகா வைரஸ் கருதப்பட்டதில்லை.
கடந்த 1960 முதல் 1980 வரை அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த இந்த வைரஸ் 2007-க்கு பிறகு தொற்று நோயாக உருவெடுத்தது.ஆனால், 2015 ல் பிரேசிலில் பரவியது முதல் இந்த நோய் வேகமாகப் பரவிவருகிறது. அங்கிருந்து பிற நாடுகளுக்கும் பரவியது. தற்போதுவரை 86 நாடுகளில் இந்த வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் தேன்கனிக்கோட்டையில் முதலில் 2017ஆம் ஆண்டு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை ஜிகா தொற்று இங்கு பதிவாகவில்லை. ஆனால், நாங்கள் அதிக எச்சரிக்கையாக இருக்கிறோம். ஜிகா வைரஸ் நோயாளிகள் யாரேனும் இருந்தால், அவர்களது மாதிரிகளை சேகரிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுரை வழங்கியுள்ளோம். என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியது குறிப்பிடத்தக்கது.
டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் மூலம் இந்த வைரசும் பரவுகிறது. "கொசுக் கடித்த பிறகு, ஜிகா வைரஸ் அறிகுறிகள் தோன்ற சுமார் ஒருவாரம் ஆகும். சில பெரியவர்களுக்கு நரம்பியல் கோளாறுகள் தோன்றும். இது 'கீலன் பா சின்ட்ரோம்' என்று அழைக்கப்படும் 'தன் தடுப்பாற்று நோய்' ஆகும். இதில், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு தனது சொந்த நரம்பு மண்டலத்தை தவறாக நினைத்துத் தாக்கத் தொடங்கும். இதனால், பக்கவாதம் ஏற்பட்டு முழங்கால், முழங்கை அசைவில்லாமல் போகும்.
ஆனால் பெரும்பாலும் தொற்று பாதித்த பலருக்கும் அறிகுறிகள் தென்படாது. தொற்று பரப்பும் கொசு கடித்த 2 முதல் 14 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படும். இது ஒரு வாரம் வரை நீடிக்கும். தொற்று பாதித்தவர்கள் பெரும்பாலும் குணமடைய வாய்ப்பு உண்டு. அதேநேரம் கர்ப்பிணிகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்படும். அல்லது பிறக்கும் குழந்தைகளுக்கு ஆபத்தான மூளை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிறவி நோய்கள் ஏற்படும்.
இதற்கு தடுப்பூசியோ, சிகிச்சையோ இல்லை. எனவே நோயாளிகள் ஓய்வு எடுத்துக் கொண்டு நிறைய திரவமாக அருந்தவேண்டும். இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் இன்னும் ஆய்வு கட்டத்திலேயே உள்ளன. எனவே கொசுக்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதே வைரசை தடுக்கும் சிறந்த வழிமுறையாகும்.
சுகாதராத்துறை மற்றும் மருத்துவர்கள் கூறும்போது இதற்கு சிகிச்சை ஏதுமில்லை என்பதால், கொசுக்கடியை தவிர்க்க ஆன மட்டும் முயற்சி செய்வதுதான் ஒரே வழி. பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்தும்படி அதிகாரிகள் அறிவுரை கூறுகிறார்கள். முழுக்கை சட்டைகளைப் பயன்படுத்தும்படியும், ஜன்னல், கதவுகளை மூடிவைக்கும்படியும் அறிவுறுத்துகிறார்கள். நிற்கும் தண்ணீரில் இந்த கொசுக்கள் முட்டையிடுகின்றன. எனவே, வாளி, பூத்தொட்டி போன்றவற்றை காலி செய்யும்படி மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.