திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி மகன் மாரடைப்பால் இறப்பு

திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Update: 2022-12-21 05:35 GMT

திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி மகன் மாரடைப்பால் காலமானார்

திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் தர்மா ரெட்டி மகன் சந்திரமவுலி மாரடைப்பு காரணமாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் தர்மாரெட்டி. இவரது மகன் சந்திரமவுலி(28).இவருக்கும், தொழிலதிபர் சேகர் ரெட்டியின் மகளுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக திருமண அழைப்பிதழ்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சந்திரமவுலி வழங்கி வந்தார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழை நேற்று முன்தினம் மாலை வழங்கிக் கொண்டிருந்தபோது, சந்திரமவுலிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்

காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சந்திரமவுலிக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டுள்ளதால், இதயம், நுரையீரலை மீட்டெடுக்க எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. உடல் உறுப்புகள் செயலிழப்பால் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளஅவரை மருத்துவக் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சந்திரமவுலி இன்று காலமானார்

அங்கு எக்மோ உள்ளிட்ட பிற சிகிச்சைகள் அளித்தும் பலனில்லை. மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலமானதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஜனவரியில் திருமணம் நடக்கவிருந்த சந்திரமௌலி இப்படி இறந்து போனது சோகத்தில் ஆழ்த்தியது.

Tags:    

Similar News