நாளை முதல் திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் ரத்து

ரயில் தண்டவாள பராமரிப்பு காரணமாக நாளை முதல் திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Update: 2023-12-31 04:00 GMT

பைல் படம்.

ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே ரயில் போக்குவரத்து 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செய்துங்கநல்லூர் – ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே முன்பதிவு இல்லாத 8 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

மேலும் வாஞ்சி மணியாச்சியிலிருந்து திருச்செந்தூருக்கு செல்லக்கூடிய இரு சிறப்பு முன்பதிவு இல்லாத ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், பாலக்காடு – திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரயில் மற்றும் சென்னை – திருச்செந்தூர்-சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை ஜன.1-ம் தேதி முதல் ஜன.5-ம் தேதி வரை திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் சந்திப்பு இடையே ஜனவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் - திருச்சிராப்பள்ளி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்:

கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்க மேற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

➤ ரயில் எண். 09419 அகமதாபாத்- திருச்சிராப்பள்ளி - அகமதாபாத் வாராந்திர சிறப்பு கட்டண ரயில்

ஜனவரி 04, 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அகமதாபாத்தில் இருந்து 09.30 மணிக்குப் புறப்பட்டு, மூன்றாவது நாள் (5 சேவைகள்) 03.45 மணிக்கு திருச்சிராப்பள்ளியை அடைகிறது.

➤ ரயில் எண். 09420 திருச்சிராப்பள்ளி - அகமதாபாத் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் திருச்சிராப்பள்ளியில் இருந்து  ஜனவரி 07, 14, 21 மற்றும் 28 (ஞாயிற்றுக்கிழமைகளில்) காலை 05.40 மணிக்குப் புறப்பட்டு, மூன்றாவது நாட்கள் (ஞாயிற்றுக்கிழமைகளில்) 21.15 மணிக்குச் சென்றடையும்.

அமைப்பு:- 1-ஏசி டூ டையர் கோச், 3- ஏசி த்ரீ டையர் கோச்சுகள், 12- ஸ்லீப்பர் கிளாஸ் கோச்சுகள், 4 ஜெனரல் செகண்ட் கிளாஸ் கோச்சுகள் 2 இரண்டாம் வகுப்பு பயிற்சியாளர்கள் (திவ்யாங்ஜன் ஃப்ரெண்ட்லி)

Tags:    

Similar News