செங்கோட்டை -கொல்லம் ரயில் ஆரியங்காவில் நின்று செல்லும்

பயணிகளின் வசதிக்காக செங்கோட்டை- கொல்லம் -செங்கோட்டை முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் டிசம்பர் 23 முதல் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.;

Update: 2021-12-23 04:15 GMT

மதுரை பயணிகளின் வசதிக்காக,  செங்கோட்டை முதல் கொல்லம் கொல்லம் -செங்கோட்டை முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் டிசம்பர் 23 முதல்,  ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும். செங்கோட்டை முதல், கொல்லம் சிறப்பு ரயில் (06659) மற்றும் கொல்லம் செங்கோட்டை சிறப்புரையில் (06660) ஆகியன,  ஆரியங்காவு ரயில் நிலையத்தில் இருந்து, மதியம் 12.5 மணிக்கும் மற்றும் மதியம் 1.08 மணிக்கு புறப்படும்.

மேலும் திண்டுக்கல் -திருச்சி முன்பதிவு இல்லாத  எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்,  டிசம்பர் 23 முதல், மணப்பாறை அருகே உள்ள சமுத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். திண்டுக்கல் திருச்சி சிறப்பு ரயில் (06498) மற்றும் திருச்சி திண்டுக்கல் சிறப்புரையில்  (06499) ஆகியன, சமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து முறையே காலை 7.43 மணிக்கும் மற்றும் மாலை 6.50 மணிக்கும் புறப்பட்டு செல்லும் என, மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. 

Tags:    

Similar News