4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தமிழகத்தில் உள்ள 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (6.12.2023) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட புறநகர் மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டியது. இதனால் சென்னையின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளநீர் வடியாத நிலையில் முழுவீச்சாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மழையால் சென்னை விமான நிலையத்தில் ஏராளமான விமானங்களின் சேவைகள் பாதிப்புக்குள்ளாகியது.
இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (6.12.2023) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
'மிக்ஜாம்' புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேற்றும் (4.12.2023) இன்றும் (5.12.2023) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது.
நாளை (6.12.2023) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.