ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை: விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை

தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், அவற்றை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2022-05-24 16:45 GMT

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பருவமழையால், தமிழகத்தில் தக்காளியின் விலை, வெளிச்சந்தையில் உயர்ந்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக அரசு கூட்டுறவுத்துறையின் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒரு கிலோ ரூ.70/ முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் வெளிச்சந்தை விலை கட்டுப்படுத்தப்படும் வரை இந்நடவடிக்கை தொடரும்.

மேலும், தேவையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News