இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள்
கனமழை தொடரும் நிலையில், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.;
தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில், இரவில் கனமழை தொடர்ந்த நிலையில், இன்றும் 11.11.2021,பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
ஈரோடு, கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், இராணிப்பேட்டை, கடலூர், சேலம், நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கோவை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.