தமிழகத்தில் இன்று மொழிப்போர் தியாகிகள் தின வீர வணக்க நாள்
தமிழகத்தில் இன்று மொழிப்போர் தியாகிகள் தின வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.
1965-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி மத்திய அரசின் கட்டாய இந்தி மொழித் திணிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் தொடங்கியது.
இளைஞர்கள் பலர் உடலில் தீ வைத்துத் தங்களை மாய்த்துக் கொண்டனர்.55 நாட்கள் நடந்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மாணவர்களின் தீவிரப் போராட்டத்தால் இந்தி மொழித் திணிப்பை மத்திய அரசு கைவிட்டது. எழுச்சி மிகுந்த அந்தப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது என்பது வரலாறு. இந்நாளில் மொழிப்போர் வீரர்களின் தியாகங்களை போற்றுவோமாக.