டெல்டா மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
School Holiday Today -கனமழை காரணமாக தஞ்சாவூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;
கனமழையால் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
School Holiday Today -தமிழகத்தின் பல பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து, பெய்து வருகிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருவதால் இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2