டிஎன்பிஎஸ்சி தேர்வு: பல இடங்களில் குளறுபடி

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வில் சில இடங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Update: 2023-02-25 05:45 GMT

சென்னை, கடலூர், சேலம், தஞ்சை மாவட்டங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறியிருப்பதால் தேர்வு தொடங்கவில்லை. தாமதம் ஏற்பட்ட மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழக அரசு தேர்வாணையம் மூலம் அரசு பணிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த போட்டித் தேர்வுகள் ஒவ்வொரு நிலையிலான பணிக்கும் ஒவ்வொரு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், தமிழக அரசு துறைகளில் 5,446 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு கடந்த மே மாதம் 21ம் தேதி குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய தேர்வுகள் நடைபெற்றன. இந்த முதல் நிலை தேர்வு எழுதியவர்களில் 57,641 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது அவர்களுக்கான முதன்மை தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த தேர்வு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் 280 தேர்வு மையங்கள் நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை தமிழ் தேர்வும், பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை பொதுத்தேர்வும் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 55,071 பேர் தேர்வு எழுதுகின்றனர். ஆண்கள் 27, 306 பேரும், பெண்கள் 27, 764 தேர்வு எழுதுகின்றனர். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வும், நேர்முகத் தேர்வு இல்லாத பணிகளுக்கு தேர்ச்சி அடிப்படையிலும் பணி வழங்கப்படும். 

தமிழகத்தில் குரூப் 2, 2A முதன்மை தேர்வில் துரைப்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறி இருப்பதால் 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியிருக்க வேண்டிய நிலையில்,  வினாத்தாள் வழங்ககுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது

தேர்வு தாமதமாக தொடங்குவதால் கூடுதல் நேரம் வழங்கப்படுமா என மாணவர்கள் எதிர்ப்பார்பில் இருந்த நிலையில் எந்தெந்த மையங்களில் தாமதமாகத் தேர்வு தொடங்குகிறதோ, அந்த மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. விளக்கமளித்துள்ளது.

Tags:    

Similar News