2024-25ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி

குரூப் 1, குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என தேர்வுக்கு தயாராகி இருந்தவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

Update: 2023-12-20 16:07 GMT

தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தேர்வு செய்து வருகிறது. நடப்பு ஆண்டில் அறிவிக்கப்படாமல் உள்ள குரூப் 1, குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என தேர்வுக்கு தயாராகி இருந்தவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்த நிலையில், 2024-25ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி இன்று அறிவித்துள்ளது. அதன்படி, குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் (ஜனவரியில்) வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் எனவும், குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

குரூப் - 1 தேர்வுக்கான அறிவிக்கை அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலையில் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல குரூப் 2, 2ஏ பணிகளுக்கு 1294 காலி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு 2024ஆம் ஆண்டு மே மாதம் வெளியாக உள்ளது. இதற்கான தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளன.

தமிழ்நாடு வனத் துறையில், ஃபாரஸ்ட் கார்டு, ஃபாரஸ்ட் வாட்ச்சர் பணிகளுக்கு1264 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு 2024 மார்ச் மாதம் வெளியாக உள்ளது. ஜூன் மாதத்தில் இதற்கான தேர்வு நடைபெற உள்ளது.

இதைப் போல மொத்தம் 19 வகையான தேர்வு குறித்த அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்றும் அவற்றுக்கான தேர்வுகள் நடைபெறும் மாதமும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நீதித் துறை நீதிபதிகளுக்கான தேர்வு, வனத் துறை அலுவலர்களுக்கான தேர்வு, ஒருங்கிணைந்த பொறியியல் துறை சேவைகளுக்கான தேர்வு, உடற்கல்வி, நூலக அலுவலர்களுக்கான தேர்வு, தொல்லியல் துறை உதவி தொல்லியல் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வு 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகும் மாதமும் தேர்வு வெளியாகும் மாதமும் கீழே தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Tags:    

Similar News