இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
16-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. 21ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். அதனையடுத்து கூட்டத் தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இன்று மாலை 6 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவை கூட உள்ளது. இரண்டாவது முறையாக நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.