தமிழக வேளாண் பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பச்சை துண்டு அணிந்து வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்;
தமிழக சட்டசபையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பச்சை துண்டு அணிந்து வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
வேளாண்மையை தொன்று தொட்டு கடைபிடித்து வருவதாக இலக்கியங்கள் கூறுகிறது. இயற்கையோடு நடத்துகின்ற கண்ணாமூச்சி ஆட்டமாக வேளாண்மை ஆகிவிட்டது.
விவசாய நிலங்கள் குறைந்து வரும் காலத்தில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.
வேளாண்மை என்பது பணி அல்ல, வாழ்க்கை முறை. தானியங்கள் மட்டுமல்ல, காய்கறி, பழங்களையும் போதிய அளவில் உற்பத்தி செய்து ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வது முக்கிய சவாலாக உள்ளது.
உற்பத்தி திறனை அதிகப்படுத்துவது இன்றைய முக்கிய தேவையாக உள்ளது. வேளாண்மையின் நோக்கம் பயிர்களை வளர்ப்பது அல்ல, மனிதர்களை பண்படுத்துவது.
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மகசூலை அதிகரிப்பதே இலக்கு. ஒரு லட்சத்து 50 ஆயிரம் விவசாிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வண்ணம் உழவர் சந்தைகள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.
டெல்டாவில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
பயிர் காப்பீடாக ரூ.1065 கோடி வழங்கப்பட்டுள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால்தான் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த முடியும்.
2021-22ம் ஆண்டில் 185 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ஒரு லட்சம் மானியம் வழங்கப்பட்டது. வேளாண் பட்டதாரிகள் மூலம் அக்ரி கிளினிக் ஏற்படுத்தப்பட்டு வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட்டன.
பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 33 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவசமாக 15 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும்.
127 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள குடும்பத்தினர்களுக்கு கேழ்வரகு வழங்கப்படும்.
60,000 வேளாண் தொழிலாளர்களுக்கு ரூ.15 கோடிக்கு வேளாண் கருவிகள்
ரூ30 கோடியில் பயறு பெருக்கு திட்டம்
தென்னை உற்பத்தியில் முதலிடம் பெற மேம்பாட்டு திட்டம்
உழவர் நலன் சார்ந்த தகவல்களை கணினி மயமாக்கி GRAINS (One Stop Solution) இணையதளம் அறிமுகம்.
பயிர்காப்பீட்டு மானியத்துக்கு ரூ.2,337 கோடி நிதி ஒதுக்கீடு
ரூ. 12 கோடியில் பருத்தி உற்பத்தியை பெருக்குவதற்கு நடவடிக்கை:
3-4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம்
ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு வேளாண் விஞ்ஞானி நியமனம்
தேனி, திண்டுக்கல்,கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 எக்டரில் சாகுபடியினை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு
பலாவில் புதிய ரகங்கள், உயர் மகசூல், மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்காக பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் பலா ஆராய்ச்சி
இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரித்திட மிளகாய் மண்டலம் அறிவிப்பு