இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் போக்ஸோவில் கைது..!
சேத்துப்பட்டு அருகே இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்;
சேத்துப்பட்டு அருகே இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.
சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயியின் 17. வயது மகள் பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார்.
இவர் திடீரென்று வீட்டிலிருந்து காணாமல் போனார். இதுகுறித்து தந்தை சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், கடந்த மாதம் 11ஆம் தேதி, அந்த இளம்பெண் தேடி கண்டுபிடிக்கப்பட்டார். அப்போது பெற்றோர் விசாரித்ததில், ஆரணி தாலுகா சென்னானந்தல் கிராமம், மாதா கோவில் தெருவைச் சேர்ந்த மரிய செல்வம் என்கிற செல்வம் மகன் ரஞ்சித் குமார், என்பவர், இளம்பெண்ணை கடத்திச் சென்று, அவருடைய பாட்டி வீடான முனியன்தாங்கல் கிராமத்தில் கொண்டுபோய் தங்க வைத்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, இளம்பெண்ணிடம் உறவு கொண்டார் என தெரியவந்தது.
அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள ரஞ்சித் குமாரை கேட்டபோது, அவர் திருமணத்திற்கு மறுத்ததால், இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின்பேரில், சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வழக்குப் பதிவுசெய்து ரஞ்சித்குமாரை தேடிவந்தனர். இந்நிலையில், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய ரஞ்சித் குமாரை, போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாயமான பள்ளி மாணவி சடலமாக மீட்பு
வந்தவாசி அருகே காணாமல் போன பள்ளி மாணவி விவசாயக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.
வந்தவாசியை அடுத்த முருக்கேரி கிராமத்தைச் சேர்ந்த சங்கா் மகள் லோகநாயகி. இவா், இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தாா். இந்நிலையில், இவா் கடந்த திங்கள்கிழமை தனது தாயுடன் விவசாய நிலத்துக்கு சென்றாராம். பின்னா், வீட்டுக்கு செல்வதாக தனது தாயிடம் கூறி விட்டு சென்றவரை காணவில்லையாம். இதையடுத்து, அவரது உறவினா்கள் லோகநாயகியை தேடி வந்தனா். இந்நிலையில், அங்குள்ள விவசாய கிணற்றில் லோகநாயகி சடலமாக மிதந்தது தெரியவந்தது.
தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் அப்பகுதிக்கு சென்று லோகநாயகியின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, சங்கா் அளித்த புகாரின்பேரில், கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.