வந்தவாசியில் மன அழுத்தத்தை போக்க போலீசாருக்கு யோகா பயிற்சி
வந்தவாசியில் மன அழுத்தத்தைப் போக்க போலீசாருக்கு யோகா பயிற்சி நடைபெற்றது.;
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் போலீசார் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாக யோகா பயிற்சி டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா தலைமையில் நடைபெற்றது.
ஆரணி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவர் அக்ரம் கலந்து கொண்டு மனதை எவ்வாறு மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து, யோகா பயிற்சி அளித்தார்.
இந்த யோகா பயிற்சியில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், அனைத்துப் பிரிவு காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.