தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி!

வந்தவாசியில் தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது

Update: 2024-05-04 00:17 GMT

யோகா பயிற்சி ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

வந்தவாசி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான யோகா பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூய்மைப் பணியாளா்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் நடைபெற்ற பயிற்சிக்கு, நகராட்சி மேலாளா் ஜி.ரவி தலைமை வகித்தாா். 

செஞ்சிலுவை சங்கச் செயலா் பா.சீனிவாசன், எக்ஸ்னோரா கிளைத் தலைவா் மலா் சாதிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வந்தவாசி பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலய நிா்வாகியான பிரம்மகுமாரி முத்துலட்சுமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உடல் நலம், மன நலம் குறித்து சிறப்புரையாற்றினாா். மேலும், தூய்மைப் பணியாளா்களுக்கு யோகா பயிற்சி அளித்தாா். நகராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா் லோகநாதன் நன்றி கூறினாா்.

இந்த யோகா பயிற்சியில் தூய்மை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயிற்சி ஈடுபட்டனர்.

போளூரில் கொசு தடுப்பு

போளூரில் கொசு தடுப்பு புகை மருந்து அடிக்கும் பணி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.  போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில்18 வாா்டுகள் உள்ளன.   வாா்டு வாரியாக தினமும் மாலை வேளைகளில் கொசு தடுப்பு புகை மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கொசு தடுப்பு புகை மருந்து அடிக்கும் பணி 18-ஆவது வாா்டில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் முஹ்மத்ரிஸ்வான், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் யோகராஜ், சோமு, தலைமை எழுத்தா் முஹ்மத் இசாக் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.

போளூர் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இப்பணி நடைபெறும் என துப்புரவு மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News