வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பெண் தையல் தொழிலாளர்கள்

மகளிர் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க கோரி பெண் தையல் தொழிலாளர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2024-06-21 01:44 GMT

வட்டாட்சியரிடம்    மனு அளிக்க ஊர்வலமாக வந்த தையல் தொழிலாளர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மகளிர் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க கோரி பெண் தையல் தொழிலாளர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அன்னை சத்யா மகளிர் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க கோரி பெண் தையல் தொழிலாளர்கள் சங்க தலைவர் ஜீனத் தலைமையில் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட பொதுச்செயலாளர் வீரபத்திரன்  விளக்க உரையாற்றினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை தையல் மகளிர் மேம்பாட்டு குடிசை கூட்டுறவு சங்கத்தில் 1600 உறுப்பினர்களும், வந்தவாசி அன்னை சத்யா தையல் மகளிர் தொழில் கூட்டுறவு சங்கத்தில் 1,100 உறுப்பினர்களும் உள்ளனர். மாவட்ட சமூக நல துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சங்கங்களில் தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச பள்ளி சீருடைகள் தைக்கப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த 20 வருடங்களாக புது உறுப்பினர் எவரையும் வந்தவாசி சங்கத்தில் சேர்க்கவில்லை என கூறப்படுகிறது. இதையொட்டி மாவட்ட தையல்கலை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அன்னை சத்யா தையல் மகளிர் தொழில் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக பெண் தையல் தொழிலாளர்கள், தங்களையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை மனுவை கடந்த 29.9.21 ல் என்ற கோரிக்கை மனுவை வட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.

தற்போது , புதிய உறுப்பினர்களை அன்னை சத்யா மகளிர் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் சேர்த்து வருவதால் தங்களையும் சேர்க்கக் கோரி பெண் தையல் தொழிலாளர் சங்கத்தினர் வட்டாட்சியர் பொன்னுசாமி இடம் மனு அளித்தனர். முன்னதாக, வட்டாட்சியரிடம் மனு அளிப்பதற்காக சங்க பொருளாளர் அப்துல்காதர் தலைமையில் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்தில் 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News