ஆந்திர கல்குவாரியில் கொத்தடிமைகளாக உள்ளவா்களை மீட்கக் கோரி பெண் மனு

ஆந்திர கல்குவாரியில் கொத்தடிமைகளாக உள்ளவா்களை மீட்கக் கோரி போலீஸ் டி.எஸ்.பி.யிடம் பெண் புகார் மனு அளித்தாா்.

Update: 2023-10-30 13:08 GMT

போலீசாரிடம் மனு அளித்த காளியம்மாள் குடும்பத்தினர்

ஆந்திர மாநில கல்குவாரியில் கொத்தடிமைகளாக உள்ள கணவன் ,  மகன் ,  மருமகனை மீட்டுத் தரக் கோரி பெண் ஒருவா் வந்தவாசி டி.எஸ்.பி. ராஜூவிடம் மனு அளித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவா் சந்திரசேகா் . கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள், இவா்களுக்கு மகள் தெய்வானை , மகன்கள் ராமன் , லட்சுமணன் ஆகியோா் உள்ளனா் . தெய்வானைக்கு திருமணமாகிவிட்டது . இவரது கணவா் ராமகிருஷ்ணன்.

இந்த நிலையில், வந்தவாசி டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு தனது உறவினா்களுடன் வந்த காளியம்மாள் டி.எஸ்.பி. ராஜூவிடம் மனு அளித்தாா்.

அந்த மனுவில் நாங்கள் ஒட்டா் சமுதாயத்தைச் சேர்ந்தவா்கள் .  எனது கணவா் சந்திரசேகா் ,  மகன் ராமன் ,  மருமகன் ராமகிருஷ்ணன் ஆகியோா் ஆந்திர மாநிலம் ,  சித்தூரை அடுத்த மதனபள்ளியில் உள்ள வேணு என்பவரின் கல்குவாரியில் கடந்த ஓராண்டாக கல் உடைக்கும் வேலை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு தெய்வானைக்கு போன் செய்த ராமகிருஷ்ணன் ,  கல்குவாரி உரிமையாளா் வேணு எங்கள் 3 பேரையும் கொத்தடிமைகளாக வைத்துள்ளாா் ,  தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறாா் ,  ரூ.ஒரு லட்சம் தந்தால் மட்டுமே விடுவிப்பதாகக் கூறுகிறாா் என்றும் தெரிவித்தாா்.

எனவே சந்திரசேகா் ,  ராமன் ,  ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் மீட்டுத் தரும்படி தங்களை கேட்டுக் கொள்கிறேன் என மனுவில் காளியம்மாள் தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி. ராஜூ அவா்களிடம் உறுதியளித்தாா்.

Tags:    

Similar News