பெரணமல்லூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ வழங்கல்

பெரணமல்லூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்

Update: 2022-05-26 13:24 GMT

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அம்பேத்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்

பெரணமல்லூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் எறும்பூர், கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. துணை வேளாண்மை அலுவலர் ராஜாராம், தலைமை தாங்கினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலாஜி, ஒன்றிய திமுக செயலாளர் ராமசாமி, உதவி வேளாண்மை அலுவலர் சங்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார தொழில்நுட்ப அலுவலர்கங்காதரன், தோட்டக்கலை அலுவலர் கவுசல்யா, உதவி தோட்டக்கலை அலுவலர் சத்யா, நிகழ்ச்சியில் விவசாயிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஆவணியாபுரம் கிராமத்தில் பெரணமல்லூர் ஒன்றியக்குழு தலைவர் இந்திரா இளங்கோவன், தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் தொடக்க விழா 10 கிராமங்களில் நடந்தது.

Tags:    

Similar News