வந்தவாசி: சிறுபான்மையினருக்கு கடன் வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டம்

வந்தவாசியில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்

Update: 2022-05-20 07:12 GMT

சிறுபான்மையினருக்கு கடன் வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சிறுபான்மையினர்.

வந்தவாசியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையினர் கடன் வழங்கக் கோரி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் யாசர் அராபத் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நவாப் ஜான், மாவட்ட குழு உறுப்பினர் சேட்டு, இலியாஸ் சர்க்கார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில துணைப் பொதுச்செயலாளர் செல்வன், மாநில குழு உறுப்பினர் அப்துல் காதர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறுபான்மையின மக்களுக்கு கடனுதவி அளிப்பதாக நடத்தப்பட்ட முகாம்கள் மூலமாக வாக்குறுதி அளித்து வருகின்றனர், ஆனால் கடனுதவி வழங்கவில்லை. டாம்கோ திட்டத்தின் மூலமாக இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், ஜெயின் சமூக மக்களுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சார்பாக கடனுதவி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பிறகு வட்டாட்சியர் முருகானந்தத்தை சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில பொது செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் சந்தித்த போராட்டக் குழுவினர் கடன் வேண்டி விண்ணப்பம் மனு அளித்தனர். போராட்டத்தில் அப்பாண்டைராஜ், சீத்தல் சந்த், ஷேக்இஸ்மாயில்சரீப் மற்றும் 200-க்கும் மேற்பட்ட சிறுபான்மையின மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News