வந்தவாசி, தேசூர் ஒன்றிய பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, தெள்ளாறு ஒன்றிய பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது;
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் மற்றும் தெள்ளாறு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மன்னப்பன், மாவட்ட அமைப்பாளர் சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட தேர்தல் பணி குழு தலைவர் மணி, மாவட்ட ஒன்றிய புதிய நிர்வாகிகள் 100 பேருக்கு நியமன கடிதங்களை வழங்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரும் எட்டாம் தேதி செய்யாற்றில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேரடியாக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்க உள்ளதால் இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட உழவர் பேரியக்க தலைவர் ரமேஷ், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ஆசை தம்பி, ஒன்றிய பொருளாளர் சந்தோஷ் குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஒன்றிய தலைவர்கள், நகர செயலாளர், முக்கிய பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் எட்டாம் தேதி செய்யாறு பகுதியில் வாக்குச்சாவடி களப்பணியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தரும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வருகையையொட்டி ஆலோசனைக் கூட்டம் நகர செயலாளர் வரதன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் அனைத்து முக்கிய பிரமுகர்களும் , அனைத்து நிலை பொறுப்பாளர்கள், ஒன்றிய நகர செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர் கணேஷ் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நகர துணை செயலாளர் செல்வம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.