வரிகளை செலுத்தி நகரின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க ஆணையர் வேண்டுகோள்
பொதுமக்கள் வரிகளை செலுத்தி நகரின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் வந்தவாசி நகராட்சியின் புதிய ஆணையர் வேண்டுகோள்;
வந்தவாசி நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ராமஜெயம் திருத்தணி நகராட்சிக்கும் , திருத்தணி நகராட்சி ஆணையர் ப்ரீத்தி வந்தவாசி நகராட்சிக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து வந்தவாசி நகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட ப்ரீத்தி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது வந்தவாசி நகராட்சிக்கு சொத்து வரி , குடிநீர் வரி, தொழில்வரி , நகராட்சி கடைகளின் மாத வாடகை என மொத்தம் ரூபாய் 6.25 கோடி வரி பாக்கி வரவேண்டியுள்ளது. இதனை வசூலிக்க முழு முயற்சி எடுக்கப்படும். பொதுமக்கள் வரிகளை செலுத்தி ஒத்துழைத்தால் தான் நகரின் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியும். நகரில் உள்ள தெரு விளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும், குப்பையில்லா நகரமாக வந்தவாசியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.