அரிசி கடையில் கள்ளத்தனமாக அரசு மதுபானம்: இருவர் கைது

களம்பூர் அருகே அரிசி கடையில் அரசு மதுபானம் பதுக்கி விற்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்

Update: 2024-02-08 10:16 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி களம்பூர் அடுத்த தட்டாங்குளம் பகுதியில் உள்ள அரிசி கடையில் அரசு மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக களம்பூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில், காவல் உதவி ஆய்வாளர் ஜெயசங்கர் மற்றும் காவல்துறையினர்  அரிசி கடைக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, அங்கு களம்பூர் தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்த ரவி (எ) குள்ளாய் ரவி , கஸ்தம்பாடி கொல்லைமேடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. தொடர்ந்து, கடையின் பின்புறம் சோதனை செய்ததில் 305 அரசு மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், இதுகுறித்து வழக்கு பதிந்து குள்ளாய் ரவி, வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்து ஆரணி குற்றவியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

துப்பாக்கி குண்டு பாய்ந்து விவசாயி காயம்

வந்தவாசியை அடுத்த பருவதம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தசரதன் மகன் பெருமாள். இவா் சோலை அருகாவூா் கிராமத்தில் உள்ள ஒருவரது விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறாா்.

இவா் அரசு உரிமம் பெறாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்துள்ளாா். இந்த நிலையில் விவசாய நிலத்திலிருந்த பெருமாள் நாட்டுத் துப்பாக்கியை இயக்கி பாா்த்துள்ளாா். இதில் நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பெருமாளின் இடது கால் தொடையில் குண்டு பாய்ந்து அவா் காயமடைந்தாா். இதையடுத்து அவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

பின்னா் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் மணிராஜ் அளித்த புகாரின்பேரில் பெருமாள் மீது வழக்குப் பதிந்த தேசூா் காவல்துறையினர், நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Tags:    

Similar News