வந்தவாசியில் மரக்கன்றுகள் நடும் விழா
வந்தவாசி ரத்ததான குழு மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தமிழ் செம்மொழி மன்றம் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது;
வந்தவாசி ரத்ததான குழு மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தமிழ் செம்மொழி மன்றம் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்தவாசி ரத்ததான குழு ஒருங்கிணைப்பாளர் ராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி , ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழ் செம்மொழி மன்ற மாவட்ட செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மரம் நடுவதால் ஏற்படும் நன்மை குறித்தும், மரம் நடுவது மட்டுமல்லாமல் ஊராட்சி மன்ற நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி பராமரிக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தாசில்தார் முருகானந்தம் , செம்மொழி மன்ற உறுப்பினர்கள் , ரத்த தான தந்த உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.