கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்குப் பயிற்சி

கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாமில் 400 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்;

Update: 2022-08-24 11:01 GMT

பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், சான்றிதழ்களை வழங்கினார்

திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், ஒன்றியம் நெடுங்குணம், அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள குறுவள மையத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு, இரண்டு நாள் கருத்தாளர், பயிற்சி முகாம் நடைபெற்றது

முகாமிற்கு பெரணமல்லூர், வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம், நெடுங்குணம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஷீலாவளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைவரையும் ஆசிரியர் பயிற்றுநர் விஜயலட்சுமி, வரவேற்றார்.முகாமில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், ஆகிய பாடங்கள் மற்றும் என்னும், எழுத்து, குறித்து பயிற்சியாளர் ஆசிரியர் சோபியா, பயிற்சி அளித்தார்.  பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில் தமிழக அரசு சிறப்பு திட்டமான இல்லம் தேடி கல்வி மூலம் மாணவர்கள் இல்லங்களுக்கு சென்று தினமும் தன்னார்வலர்கள் மூலம் என்னும், எழுத்தும், வகுப்புகள் எடுக்கப்பட்டு, இப்போது மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் இதன்மூலம் கற்றல் திறன் அதிகரித்து அதிக அளவில் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து அரசின் திட்டங்களை பயன்பெற வேண்டும் என்று பேசினார்.

இதேபோல் பெரணமல்லூர், மேலதாங்கல் மடம், ஆவணியாபுரம், நமத்தோடு, வல்லம், பெரிய கொழப்பலூர், உள்பட 8 குறுவள மையங்களில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு கருத்தாளர் பயிற்சி முகாம் நடந்தது. இதில் 400க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் பெரணமல்லூர் வட்டார வள மேற்பார்வையாளர் ராஜா நன்றி கூறினார்.

Tags:    

Similar News