வந்தவாசியில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்
டெல்லியில் பெண் காவலர் சபியாவை கொன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி வந்தவாசியில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது;
டெல்லியில் பெண் காவலர் சபியா கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வந்தவாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் முகமது யூசுப் தலைமை தாங்கினார். தலைமை கழக பேச்சாளர் அப்துல் காதர் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.