வந்தவாசி அருகே வாகன விபத்தில் தந்தை, மகள் உட்பட மூன்று பேர் உயிரிழப்பு

வந்தவாசி அருகே நடந்த வாகன விபத்தில் தந்தை, மகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-08-17 11:28 GMT

விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர் ( மாதிரி படம்)

வந்தவாசி அருகே நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பழைய மும்முனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார்.

இந்நிலையில் வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் ராஜசேகர், மனைவி பத்மினி, இவர்களது மகள்கள் சுபாஷினி, மோகனா ஸ்ரீ, மற்றும் பத்மினியின் தங்கை பானுமதி ஆகிய 5 பேரும், பச்சையம்மன் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

இருசக்கர வாகனத்தை ராஜசேகர் ஓட்டியுள்ளார். அங்கு, சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் புறவழிச்சாலையில் சென்றபோது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோர தடுப்புக் கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பத்மினி தங்கை பானுமதி, சிறுமி மோகனா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராஜசேகர், பத்மினி, சுபாஷினி ஆகிய 3 பேரும், வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து மூவரும் மேல்சிகிச்சைக்காக மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அங்கே, மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ராஜசேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், தாய் பத்மா மற்றும் மகள் சுபாஷினி இருவருக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து பொன்னூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வந்தவாசி அடுத்த கீழ் சாத்தமங்கலம் கூட்டுச்சாலை அருகே ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் நிலை தடுமாறி கீழே விழுந்த விபத்தில், தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News