சீட்டு நிறுவனத்தில் பணத்தை இழந்தவர்கள் முற்றுகைப் போராட்டம்

தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட நிதிவு நிறுவனம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-10-01 02:24 GMT

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட நிதிவு நிறுவனம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றை தலைமையிடமாக கொண்டு  வி ஆர் எஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல் பட்டு வந்தது . தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை ஒட்டி மாத சீட்டு பிடிக்கப்பட்டு வந்தது. மாத தவணையாக ரூபாய் 300 முதல் 5 ஆயிரம் வரை பணம் வசூலிக்கப்பட்டது.

ஆண்டுக்கு ரூபாய் 3000 செலுத்துபவர்களுக்கு பத்தாயிரம் மதிப்பிலான மளிகை பொருட்களும், பட்டாசும் ,இனிப்புகளும் வழங்கப்படும் என்றும், ரூபாய் 60,000 செலுத்துபவர்களுக்கு 2 லட்சம் மதிப்பில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயம், பட்டாசு, மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இதனால் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ,விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்தனர் . ஆனால் கடந்த ஆண்டு நிதி நிறுவனம் கூறியபடி பொருட்களை வழங்கவில்லை .

இதனால் பணம் கட்டியவர்கள் திருவண்ணாமலை மாவட்ட பொருளாதாரம் குற்ற பிரிவு போலீசில் புகார் செய்திருந்தனர் . அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்யாற்றில் ஒரு இடத்திலும், வந்தவாசியில் இரண்டு இடங்களிலும் இயங்கி வந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டிற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தின் உரிமையாளர் சமஸ் மொய்தீன் தலைமறைவானார் . அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இந்த முறையாவது கட்டிய பணத்தை தர வேண்டும் என வலியுறுத்தி வந்தவாசியில் உள்ள நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டை முற்றுகையிட பணத்தை இழந்த 500   க்கும் மேற்பட்டவர்கள் முயன்றனர் .

இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விசுவநாதன், தலைமையிலான போலீசார் வந்தவாசி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பொதுமக்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார் . அப்போது பணத்தை மீட்டு தரவில்லை என்றால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறினர்.

போலீசார் பணத்தைப் பெற்றுத் தர நடவடிக்கைகள் மற்றும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறி அவர்களை சமாதானப்படுத்தினர்  அதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News