திருவண்ணாமலை திமுக வடக்கு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
திருவண்ணாமலை திமுக வடக்கு, தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் எ.வ..வேலு பங்கேற்றார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தெற்கு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது . கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவை தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் தலைமை வகித்தார். துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலை வகித்தார் .வடக்கு மாவட்ட கழக செயலாளர் தரணி வேந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர், அமைச்சருமான எ.வ. வேலு தீர்மானங்களை விளக்கி சிறப்புரையாற்றினார். செயற்குழுக் கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது
முதலில் மாவட்ட முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் செல்வம் மறைவிற்கும், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி அவர்களின் தாயார் மறைவிற்கும், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் சகோதரரின் மறைவிற்கும், வந்தவாசி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபு மறைவிற்கும், பிரபல திரைப்பட நடிகர் மயில்சாமி மறைவிற்கும், மாவட்ட திமுக ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியின் சாதனைகளை அங்கீகரித்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கழக கூட்டணி வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பெருமக்களுக்கும் ,வெற்றியைத் தேடித் தந்த திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் , வேலு ஆகியோருக்கு இந்த மாவட்ட கழகம் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 உரிமைத் தொகை வழங்கி இந்தியாவிற்கே வழிகாட்டிய மற்றும் பல சிறப்பு அம்சங்களை கொண்ட தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை, வழங்கி சொன்னதை செய்யும் முதல்வராக திகழ்கிறார் .
இத்திட்டத்தை மகளிர்க்கு முதல்வர் அளித்த மகத்தான கௌரவம் என்றும் , அனைத்து தரப்பினரும் வரவேற்கும் நிதி அறிக்கை என அனைத்து தலைவர்களும் அனைத்து பத்திரிகை ஊடகங்களும் பாராட்டு நிதிநிலை அறிக்கையையும் வேளாண்மைக்காக தனி நிதிநிலை அறிக்கையையும் சந்தித்த இந்தியா போற்றும் திராவிட மாடல் அரசை நடத்தி வரும் முதல்வரை இந்த மாவட்ட திமுக பாராட்டி மகிழ்கிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடும் நமதே நாற்பதும் நமதே முதல்வரின் முழக்கத்தை நடைமுறைப்படுத்த இன்றிலிருந்து கழக நிர்வாகிகளும் தோழர்களும் அயராது பாடுபடுவது எனவும், இதற்காக வாக்குச்சாவடி குழு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உடனடியாக அமைத்திட வேண்டும் என இந்த மாவட்டம் கழகம் கேட்டுக்கொள்கிறது.
தொடர்ந்து நமது திருவண்ணாமலை வடக்கு தெற்கு மாவட்டங்களில் அதிகபட்சமாக உறுப்பினர்களை சேர்த்து கழகத் தலைவரின் ஆணையை நிறைவேற்றுவோம் என இம்மாவட்ட திமுக தீர்மானித்துள்ளது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழுக் கூட்டத்தில் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பொறுப்பாளர்கள் முகமது சகி, மாலதி நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செயற்குழு கூட்டத்தில் திமுக மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே. கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதரன், பொன் முத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, அம்பேத்குமார், சரவணன், ஜோதி, மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட கழக பொறுப்பாளர்கள், செயற்குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.