காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர்

வந்தவாசி அருகே காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் பாமகவினர் ஈடுபட்டனர்.;

Update: 2024-02-23 13:12 GMT

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர்.

போலீஸாரைக் கண்டித்து, கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாமகவினா், அந்தக் காவல் நிலையம் முன் அமா்ந்து தர்ணா நடத்தினா்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் . இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அருகே அதே கிராமத்தைச்சேர்ந்த வேலு என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.

வேலு தனது 4 ஏக்கர் விவசாய நிலத்தில் வேர்கடலை பயிர் செய்து வருகின்றார். சங்கர் 80 சென்ட் நிலத்தில் நெல் பயிர் செய்து வருகின்றாராம். நெல் பயிருக்கு வரும் எலிகள் அருகில் உள்ள வேர்கடலை பயிர்களை சேதப்படுத்திவருவதாக கூறப்படுகின்றது. இதனால் கடந்த 20 ம் தேதி விவசாய நிலத்தில் சங்கர் மனைவி செல்வி , இவரது மாமனார் ராகவன் ஆகியோர் வேளாண் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வேலு உங்கள் நெல் பயிரால் தான் எனது வேர்கடலை பயிரை வரப்பில் துளையிட்டு எலிகள் சேதப்படுத்தியுள்ளது என கேட்டாரம். அப்போது ஏற்பட்ட வாக்குவாத்தில் ராகவனை வேலு தாக்கியதாக கூறப்படுகின்றது. தடுக்க வந்த செல்வியை தாக்கி சாதி பெயரை குறிப்பிட்டு வேலு பேசியதாகவும், பதிலுக்கு ராகவனும் செல்வியும் வேலுவை தாக்கியுள்ளனர். இதுகுறித்து செல்வி, வேலு தனிதனியே கீழ்கொடுங்காலூர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து சாதி பெயரை குறிப்பிட்டு ஆபாசமாக பேசியதாக வழக்குப்பதிவு செய்து வேலுவை நேற்று அதிகாலை கைது செய்தார். மேலும் வேலு கொடுத்த புகாரில் குறிப்பிட்டு செல்வி, ராகவன் இருவரும் தலைமறைவானதால் தேடி வந்தனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஏன் தேவையில்லாமல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தீர்கள் எனகேட்டு இன்று காலை பாமகவினர் வந்தவாசி ஒன்றிய குழுத்துணை தலைவர் விஜயன் தலைமையில் கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும், போலீஸாா் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக புகாா் தெரிவித்தும், வேலு மீது பதியப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவை நீக்கக் கோரியும், காவல் நிலையம் முன் அமா்ந்து அவா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி டிஎஸ்பி ராஜூ, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News