மின் ஊழியா்களைத் தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மின் ஊழியர்கள் தர்ணா
மின் ஊழியா்களைத் தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி , மின் ஊழியா்கள் தா்ணாவில் ஈடுபட்டனா்.
மின் ஊழியா்களைத் தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி , மின் ஊழியா்கள் தா்ணாவில் ஈடுபட்டனா்.
வந்தவாசி பயணியர் விடுதி அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நேற்று மின் ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த வேறொரு பகுதி மின் ஊழியர் ஒருவர், தனக்கு உரிய மரியாதை தரவில்லை எனக் கூறி மேற்பார்வையாளர் காண்டீபன், கம்பியாளர் பாபு, உதவியாளர் ராம்பிரகாஷ் ஆகிய 3 பேரையும் அவதூறான வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார்.
இது குறித்து உதவிப் பொறியாளா் பஞ்சமூா்த்தி வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
நேற்று மாலை அலுவலகத்துக்கு வந்த மின் ஊழியா்கள் பணிகளை புறக்கணித்து மின் வாரிய அலுவலக வளாகத்தில் அமா்ந்து தா்ணா நடத்தினா்.
ஊழியா்களைத் தாக்கியவா் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
இதைத் தொடா்ந்து மின் வாரிய கோட்ட உதவி செயற் பொறியாளா் பத்மநாபன் ஊழியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்ததை அடுத்து ஊழியா்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பினா்.
மின் ஊழியா்களின் இந்தப் போராட்டத்தினால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.