வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநாடு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க இரண்டாவது வட்ட மாநாடு நடைபெற்றது

Update: 2022-07-19 07:04 GMT

வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் மாநாடு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க 2-வது வட்ட மாநாடு வட்டார தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் அருள்ஜோதி முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் கே.பெருமாள், மாவட்ட தலைவர் என்.சங்கர், மாவட்டச் செயலாளர் கே.ரமணன், பொருளாளர் எம்.மெய்யழகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வருவாய் கிராம ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் வட்ட புதிய தலைவராக எம்.அருள்ஜோதி, செயலராக வி.பாரதி, பொருளாளராக எம்.பாக்கியராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வருவாய் கிராம ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News