திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

Update: 2021-08-24 09:45 GMT

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோதிலிங்கம் தெரிவித்தார்.

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை துவக்கி வைத்து பேசிய நல அலுவலர்,  திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 24 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 9 ஆயிரம் பேருக்கு மட்டுமே இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் வந்தவாசி நகராட்சி ஆணையர் உஷாராணி, மருத்துவர் அருணா மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், இளநிலை உதவியாளர்கள், சேவை அமைப்பு நிர்வாகிகள்,  மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News